`ஜெய் ஸ்ரீ ராம்' சொன்ன நிமிடமே விழுந்த அடி.. பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு

`ஜெய் ஸ்ரீ ராம்' சொன்ன நிமிடமே விழுந்த அடி.. பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு
Published on

"ஜெய் ஸ்ரீ ராம்..." என கூறியதற்காக பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள தாபாவில், பா.ஜ.க.வின் வேலூர் மாவட்ட செயலாளர் லோகேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தாபா ஊழியரிடம் பரஸ்பரம் "ஜெய் ஸ்ரீ ராம்..." என கூறியதாக தெரிகிறது. உடனே அருகில் இருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த மர்ம நபர்கள் லோகேஷ் மற்றும் உடன் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com