மதுரை ரோடு ஷோ - நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். இதனால் ஏற்பட்ட வாகன நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மதுரை காளவாசல் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியது. இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டனர்.
Next Story
