Atlee| Anant Ambani| மனைவி உடையில் அம்பானி மகன் பெயர் - முதல்முறையாக அட்லீ விளக்கம்
மனைவி உடையில் அம்பானி மகன் பெயர் - முதல்முறையாக அட்லீ விளக்கம்
#anantambani #atleewife #atlee
மனைவி உடையில் அம்பானி மகனின் பெயர் - அட்லி விளக்கம் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட போது எழுந்த விமர்சனங்கள் குறித்து, இயக்குனர் அட்லி மனம் திறந்துள்ளார்... முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில், இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் பங்கேற்றார். அப்போது, பிரியாவின் உடையில் ஆனந்த் அம்பானியின் ஆதரவாளர் (ANANT'S BRIGADE) என்ற வாசகம் இடம்பெற்றது குறித்து விவாதம் கிளம்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த அட்லி, ஆனந்த் அம்பானி தனது நண்பர் என்றும், இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் என்றும் கூறினார். அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றும், விமர்சனங்களுக்கு தனது படங்களே எப்போதும் பதிலாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
