ரூ.62,000 லேப்டாப்பை தராமல் ஏமாற்றிய அமேசான் - மோசடி புகார் பதிவு

x

திருவண்ணாமலை அருகே, ஆன்லைன் மூலமாக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, சார்ஜர் மட்டும் அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளதாக அமேசான் நிறுவனத்தின் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போளூரை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது மகனிற்காக அமேசான் நிறுவனத்தில், 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தார். மொத்த பணமும் செலுத்தப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் லேப்டாப் அனுப்பாமல், சார்ஜர் மட்டும் அனுப்பியுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய பிரபு, சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்