முந்திரி விவசாயியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி - பரபரப்பு

x

முந்திரி விவசாயியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி - பரபரப்பு

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முந்திரி விவசாயியை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராஜேந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜேந்திரன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேரில் விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்