ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு
Published on
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அணையை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார். டிசம்பர் மாதம் இறுதிவரை மொத்தம்135 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகிறது. 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 92 அடியாகும். நீர்வரத்து ஆயிரத்து 381 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு விநாடிக்கு129 கனஅடியாகவும் உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com