சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் பிரத்யேக பிரிவை ஆலியா மானசா திறந்து வைத்தார்.
சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் மணமகளுக்கான பிரத்யேக பிரிவை நடிகை ஆலியா மானசா திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று கல்யாண் சில்க்ஸ். பல நகரங்களில் கிளைகளுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கல்யாண் சில்க்ஸ் கிளையில் மணப்பெண்களுக்கென்றே பிரத்யேகமாகவும், பிரம்மாண்டமாகவும் "மண வீடு" என்ற பெயரில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிரிவினை சின்னத்திரை நடிகை ஆலியா மனசா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இதில் கல்யாண் சில்க்ஸின் உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட கல்யாண் சில்க்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
