Chennai Rains | சென்னைக்கு அலர்ட் | இன்றே படையெடுத்த டிராக்டர்கள்

சென்னைக்கு அலர்ட் | இன்றே படையெடுத்த டிராக்டர்கள்

Chennai Rains | சென்னைக்கு அலர்ட் | இன்றே படையெடுத்த டிராக்டர்கள்

#chennairains #chennai #chennaiflood #tnrains #thanthitv

மழைநீரை வெளியேற்ற மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் சென்னை வருகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஊராட்சிகளில் இருந்து மழை நீரை அகற்ற பயன்படுத்தும் டிராக்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே, மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் உள்ள ஊராட்சியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, இந்த டிராக்டர்கள் மதுரவாயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னையில் தண்ணீர் தேங்க கூடிய பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com