"இன்னும் 5 ரூபா கொடுங்க.." - டாஸ்மாக் ஊழியருடன் மதுப்பிரியர் வாக்குவாதம்

x

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே, டாஸ்மாக் கடையில் ஊ​ழியருடன் மதுப்பிரியர் வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நித்திரவிளை பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், 200 ரூபாய் நோட்டை கொடுத்து 185 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை வாங்கியுள்ளனர். பணியில் இருந்த ஊழியர், மது பாட்டிலை வழங்கிவிட்டு, பாக்கி பணம் 15 ரூபாய்க்கு பதிலாக 10 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர், மீதமுள்ள 5 ரூபாய் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு அந்த ஊழியர், தான் 195 ரூபாய் வழங்கியதாக கூறிவிட்டு தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்