மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு - இருவருக்கு கத்திக்குத்து

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே, மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு - இருவருக்கு கத்திக்குத்து
Published on

கடைமலைபுத்தூரை சேர்ந்த விமல், மணிகண்டன், ஜெயராமன் ஆகியோரும், அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் புதுச்சேரியை சேர்ந்த மணிவண்ணன், மணிகண்டன் ஆகியோரும் இரவு மது அருந்திக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விமல், ஜெயராமன், மணிகண்டன், புதுச்சேரியை சேர்ந்த மணிவண்ணன், மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோர் விமல் மற்றும் மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தகராறு தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com