Alcohol | மதுபோதையில் பேருந்தை மறித்து அட்ராசிட்டி - சிசிடிவி காட்சி வெளியீடு
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தனியார் பேருந்தை மதுபோதையில் வழிமறித்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து பண்ணைப்பட்டி கிராமத்தின் வழியே சென்ற போது, அங்கு தலைகால் தெரியாத அளவுக்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் மிரட்டல் தொணியில் பேசியதோடு மட்டுமல்லாமல், சாலையில் படுத்து பேருந்தை நகர விடாமல் அட்டூழியம் செய்தார்.தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரகளையில் ஈடுபட்ட அவரை கண்டித்து இழுத்துச் சென்ற நிலையில், பயணிகள் நிம்மதியடைந்தனர்.
Next Story
