"இளைஞர்களிடையே பரவும் போதைக் கலாசாரம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பகீர் தகவல்

"குற்ற செயல்களில் ஈடுபட தூண்டும் போதை மாத்திரை" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்
"இளைஞர்களிடையே பரவும் போதைக் கலாசாரம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பகீர் தகவல்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கான மூன்று நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் 18 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் குற்ற செயல்களை செய்யத் தூண்டும் போதை மாத்திரையை உட்கொள்வதாக குறிப்பிட்டார். அப்போது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அந்த போதை மாத்திரையை எடுத்துக் காண்பித்தார்.அதேபோல மதுப்பழக்கம் உள்ளவர்களும் குற்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாகவும் நீதிபதி பிரகாஷ் குறிப்பிட்டார். தன்னார்வ நிறுவனங்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும்

நீதிபதி கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com