ஆல்பர்ட் தியேட்டரில் அதிரடி ரெய்டு - பச்சையாக சமாளித்த கேண்டீன்.. அம்பலமாக்கி அலறவிட்ட ஆபீஸர் சதீஷ்

சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பொறுப்பு? என்று எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் ஊழியர்களோடு தாய் ஒருவர் வாதிடும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்கள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், போலீசில் புகார் தெரிவித்தார்.

ஆனால், பெண் வாங்கிய குளிர்பானம் காலாவதி ஆகவில்லை என்றும் லிச்சி ஃப்ளேவர் குளிர்பானம் என்பதால் அதில் மதுபானம் போன்ற வாசனை இருப்பதாகவும் தெரிவித்தது தியேட்டர் கேண்டீன் நிர்வாகம்..

இந்த சூழலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையில் அதிகாரிகள் குழு ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீனில் அதிரடி சோதனையை தொடங்கினர். பெண் குறிப்பிட்ட குளிர்பானங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுப் பொருட்களை சேர்த்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஆய்வு செய்தவர்கள், ஐஸ் பெட்டியில் இருந்த தேதி குறிப்பிடாத உணவுப் பொருட்கள், பாக்ஸ்-களில் பூஞ்சைகள் படர்ந்து கிடந்த பாப்கான்களையும் வெளியே தூக்கிப்போட உத்தரவிட்டனர்.

ஆய்வின்போது அதில் என்னங்க புழு என்று அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தது பார்ப்போரை பதறச் செய்தது...

பெண் குற்றம்சாட்டிய குறிப்பிட்ட வகை குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், தியேட்டரில் கேண்டீன் நடத்தும் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

சென்னை முழுவதும் இதேபோன்று தியேட்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். சமீபத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் உணவு சாப்பிட்ட தம்பதியினர் மீனில் புழு இருந்ததை வீடியோவாக வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் சர்வ சாதாரணமாகி வருகிறது.

இதெல்லாம் நாம் ஆசைக்கு வெளியே சாப்பிடும் பொருட்கள் எல்லாம் பாதுகாப்பானதா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

கேட்ட விலையை கொடுத்து வாங்குகிறோம்... நல்ல பொருட்களை கொடுக்கலாமே... சாப்பிடும் பொருளை இப்படியா கொடுப்பீங்க என ஆதங்கம் தெரிவிப்போரது கோரிக்கை எல்லாம், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கிறது.....

X