Alangulam | முதல் மனைவி மகனுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு - ஆத்திரத்தில் 2வது மனைவி செய்த செயல்
ஆலங்குளம் அருகே முதல் மனைவியின் மகனுக்கு பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி ரேசன் கடையில் ரகளையில் ஈடுபட்டார்.
துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த மகன் தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.
ரமேசும் அவரது 2வது மனைவியும் ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க வந்த போது ஏற்கெனவே தங்கள் மகன் வாங்கி விட்டதாக ஊழியர் கூறியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த இருவரும் கடையில் இருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை தூக்கிச் சென்றனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
Next Story
