அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - அழைப்பிதழ் வெளியீடு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கான அழைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடுதல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் தொடங்கப்பட உள்ளன
Next Story
