ஆலந்தூர் மெட்ரோ பணி.. ``வீடே அதிருது..’’ பீதியுடன் மக்கள் பேட்டி

x

ஆலந்தூரில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான பள்ளம் தோண்டும் போது பயங்கர அதிர்வுகள் உணரப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பூந்தமல்லி - பரங்கிமலை இடையேயான 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்காக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இயந்திரங்களை கொண்டு பள்ளம்தோண்டி ‘பில்லர்' அமைக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் நடக்கும்போது சுற்றுவட்டார குடியிருப்புகளில் தொடர் அதிர்வுகள் ஏற்படுவதாகவும், வீடுகளில் விரிசல் விழுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்