போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் மூதாட்டி - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு

சென்னை தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் மூதாட்டியை அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் மூதாட்டி - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு
Published on

சென்னை தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் மூதாட்டியை அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி வழங்கினார். தரமணியை சேர்ந்த ஷகூர்பானு, கடந்த சில மாதங்களாக தரமணி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வருகிறார். இவரது ஆர்வத்தை பார்த்த காவல்துறையினர் அவருக்கு "பிரன்ஸ் ஆப் போலீஸ்"ல் இணைய வைத்து ஊக்கப்படுத்தினர். இந்த விவரம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தெரிய வர, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலத்திற்கு ஷகூர் பானுவை வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com