AK | Ajith Kumar | நடிகர் அஜித்திற்கு முழு உருவச் சிலை திறப்பு - கோவில் கட்டவும் ஏற்பாடு

AK | Ajith Kumar | நடிகர் அஜித்திற்கு முழு உருவச் சிலை திறப்பு - கோவில் கட்டவும் ஏற்பாடு

AK | Ajith Kumar | நடிகர் அஜித்திற்கு முழு உருவச் சிலை திறப்பு - கோவில் கட்டவும் ஏற்பாடு

சென்னையில் நடிகர் அஜித்தின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மாங்காடு அடுத்த கோவூரில், நடிகர் அஜித்தை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், நடிகர் அஜித்தின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டு, கட்சித் தலைவர் பாபு அதனைத் திறந்து வைத்து பால் அபிஷேகம் செய்தார். மேலும், 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, சிலைக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து ரசிகர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், கோவூரில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்திற்காகப் பிரத்யேகக் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com