ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தில் பிணைத்தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார். அதனை திரும்பத் தர கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பணத்தை திரும்பக் கொடுக்க உத்தரவிட மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம், தான் வெற்றிபெற்ற தொகுதியில் கவனம் செலுத்துமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.