AirAsia | Chennais Amirta | சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் ஏர் ஏசியாவின் கேம்பஸ் இன்டர்வியூ

AirAsia | Chennais Amirta | சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் ஏர் ஏசியாவின் கேம்பஸ் இன்டர்வியூ

விமானத் துறையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஆசியாவின் முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவின் (AirAsia) கேம்பஸ் இன்டர்வியூ முகாம் சிறப்பாக நடைபெற்றது. சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசியாவின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார். ஏர் ஏசியா பராமரிப்புப் பிரிவு தலைவர் சரவணன் ராஜ் முனுசாமி, மாணவர்களிடையே சர்வதேச வேலைவாய்ப்புச் சூழல் குறித்து உரையாற்றினார். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஏர் ஏசியா நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 31,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சென்னைஸ் அமிர்தா வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com