Air india | Flight | 1 மணி நேரம் ஏர் இந்தியா விமானத்திற்குள் திக்.. திக்..பதறி துடித்த 160 பயணிகள்
கதவு திறக்காததால் 1 மணி நேரம் ஏர் இந்தியா விமானத்தில் சிக்கிய பயணிகள்
ராய்ப்பூரில் தரையிரறங்கிய ஏர் இந்தியா விமானம் கதவு திறக்காததால் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்தில் சிக்கி பரிதவித்தனர்.டெல்லியில் இருந்து சுமார் 160 பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுகிழமை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.அப்போது விமானத்தின் கதவு திறக்காததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திற்கு உள்ளே சிக்கி தவித்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து இறங்கப்பட்ட நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் கதவு திறக்கமுடியவில்லை ஊழியர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Next Story
