சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்
Published on
கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சைபெற்று வந்த துணைமுதலமைச்சர் சகோதரர் பாலமுருகனை உயர்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. அது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கு வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com