அதிமுக MP சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அ.தி.மு.க., எம்பி சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. தமிழ்நாடு அரசு, தி.மு.க, அதிமுக தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தது. இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றார். அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய நீதிபதி, அ.தி.மு.க எம்.பி சி.வி. சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவி்ட்டார்.
