அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
Published on

நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். கடந்த 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இருவரும் 29 ஆம் தேதி பதவியேற்பதாக இருந்தது. சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில் பதவியேற்றனர் சபாநாயகர் தனபால் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றதையடுத்து சட்டப்பேரவையில் அதிமுகவில் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com