EPS நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அதிமுகவினர் எஸ்.பி.யிடம் மனு

x

ஈபிஎஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அதிமுகவினர் எஸ்.பியிடம் மனு

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் .எம்.சுகுமார் தலைமையிலான அதிமுகவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி அதிமுகவின் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் எழுச்சி பயணம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில், எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி வழங்கி பாதுகாப்பு தர வேண்டி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார் தலைமையிலான அதிமுகவினர் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அய்மன் ஜமாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார், மாவட்ட எஸ்.பி.யிடம் விரிவாக எடுத்துரைத்தார். இதில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்