இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுகவினர் வாக்குவாதம் | பரபரப்பான பரமக்குடி
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுகவினர் வாக்குவாதம்
இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அதிமுகவினருக்கு முறையாக வரவேற்பு அறிவிக்கவில்லை எனக்கூறி, கட்சி நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது 68வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் உட்பட பலர் போலீஸ் பாதுகாப்புடன் மலர் வளையம் வைக்க வருகை தந்தனர். அப்போது நினைவிடத்தில் அதிமுகவினருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக வரவேற்பு அறிவிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுகவினர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
