சொந்த செலவில் விளையாட்டு திடல் அமைத்த அதிமுக பிரமுகர்

x

சொந்த செலவில் விளையாட்டு திடல் அமைத்த அதிமுக பிரமுகர்

போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மாற்றும் முயற்சியாக அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சொந்த செலவில் விளையாட்டு திடல் அமைத்திருப்பது வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் நான்கு வழி சந்திப்பில் பேருந்து நிலையத்தை ஒட்டி இந்த புதிய விளையாட்டு திடலை அவர் தனது சொந்த அமைத்துள்ளார்.இந்நிலையில் இதனை முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். கலவை ஒன்றிய செயலாளர் சொறையூர் குமார் தலைமை தாங்கினார். இந்த திடலில் வாலிபால், பேட்-மிட்டன் ஆகிய விளையாட்டு பயிற்சியில் ஈடுபட இதனை தொடர்ந்து இருவரும், விளையாட்டு வீரர்களிடம் பேசிய போது, இந்த திடலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மாணவ மாணவிகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு, முதல் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்து அவர்களுடன் பேட் மிட்டன், வாலிபால் விளையாடி மகிழ்ந்தனர். இது குறித்து பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், இளைஞர்களிடையே சமீபத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை மாற்றி அவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே விளையாட்டு திடல்களை ஏற்படுத்தி தமிழகத்தில் போதைப் பழக்கத்தின் தன்மையை குறைக்க திடல்களை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்