கட்சி பெயரை தவறாக பயன்படுத்தியதாக புகார் - முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது

முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தொடர்ந்து அவர் தவறாக பயன்படுத்தி வந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை சூலூர் காவல்நிலையத்தில், கே.சி.பழனிசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com