Aiadmk Flex | Viral Video | அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன், தந்தை காயம் - அதிர்ச்சி வீடியோ

x

Aiadmk Flex | Viral Video | அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன், தந்தை காயம் - அதிர்ச்சி வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அதிமுக பேரணிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிந்து விழுந்ததில், தந்தை மகன் ஆகிய இருவர் காயமடைந்தனர். அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ் வருகையை ஒட்டி ஆம்பூரில் வைக்கப்படிருந்த பேனர் காற்றில் கிழிந்து, சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்த‌து. இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த‌தில், அதில் பயணித்த பள்ளி மாணவனும் மற்றும் அவரது தந்தையும், காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேம்பாலத்தில் இருந்து பேனர் கிழிந்து சாலையில் விழும் சிசிடிவி காட்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்