முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகன் கொலை வழக்கு - வெளியான முக்கிய தகவல்..

அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் கொலை வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமாரை, அவரது அண்ணன் பெரியசாமியின் மகன் முன்விரோதத்தில் வெட்டிக் கொலை செய்தார். இதில் பெரியசாமியின் மகன் லோகநாதன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி முபராக் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார்.மேலும் தலைமைறைவாக உள்ள பிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com