

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நோயுற்றோருக்கு சிகிச்சையும், நிவாரணமும் அளிப்பதற்காக அதிமுக அரசு இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருவதாக அதில் தெரிவித்து உள்ளனர்.