அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது
Published on

பல்லாவரம் நகராட்சி ராஜாஜி நகர் 8வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார், விஜயகுமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீர் விடுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு விஜயகுமார் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

சரமாரி தாக்குதலில் படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விஜயகுமாரை கொலை செய்ய முயற்சித்த காட்சிகள் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், அ.தி.மு.க. வட்ட செயலாளரை முன் விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டிய சரவணன், விஜயகுமார், பிரகாஷ், நவீன்ராஜ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com