பாம்பு விஷத்தை முறிக்கும் AI..? மிரட்டும் மருத்துவ உலகம்
டென்மார்க்கில் உள்ள விஞ்ஞானிகள் ஏஐ உதவியுடன் பாம்பு விஷ முறிவு மருந்தை உருவாக்கி வருகின்றனர். பாம்பு விஷ நச்சுக்களை திறம்பட நடுநிலையாக்கக்கூடிய புரதங்களை வடிவமைக்க ஏஐ-ஐ பயன்படுத்தி வரும் விஞ்ஞானிகள், இதன் மூலம் உலகம் முழுவதும் ஆண்டோன்றுக்கு பாம்பு கடிக்கு ஆளாகும் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிய நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். பாம்பு கடிக்கு உலகம் முழுவதும் ஆண்டோன்றுக்கு 81 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
