AI Love| AI Marriage| `AI-யில்’ பெண்ணை உருவாக்கி குழந்தை பெற்று குடும்பம் நடத்திய சென்னை இளைஞர் கைது

x

AI-யில் பெண்ணை உருவாக்கி குடும்பம் நடத்திய சென்னை இளைஞர் கைது

ஏ.ஐயில் காதலியை வடிவமைத்து அதனுடன் குடும்பம் நடத்தி இளைஞர் தனி உலகத்தில் வாழ்ந்து வந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

இணையம் எங்கும் AI மோகம் சூழ்ந்திருக்க, அவ்வப்போது அதை வைத்து விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறி வருகின்றன.

அப்படி, இளைஞர் ஒருவர் தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து போலீசார் அவரது கணினியை ஆய்வு செய்தபோதுதான், அவரது வினோதமான, விபரீதமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தான் ஒருதலைபட்சமாக காதலித்த பெண்ணை AI மூலம் உருவாக்கி, அதில் அவரை காதலிப்பது போன்று புகைப்படம் வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.

ஒருகட்டத்தில் ஏ.ஐ. துணையுடன் அவரை திருமணம் செய்து, குழந்தை பெற்று, ஜாலியாக குடும்பம் நடத்தும் நிலைக்கே சென்றவர், சம்பந்தப்பட்ட ஏஐ வீடியோக்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை எடுத்துக்கூறி இனி இது போன்று மற்றவர்கள் செயல்படக்கூடாதபடி தண்டனை வழங்குமாறி வாதாடினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஏ.ஐ. காதல் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்