கிறிஸ்துமஸ் முன்னிட்டு - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ரெய்டு
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாளையொட்டி கேக் தயாரிக்கும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கேக் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கேக்கில் பயன்படுத்தக்கூடிய வண்ண நிறங்கள் உணவு பாதுகாப்பு விதிமுறையின் அளவுபடி உள்ளதா? ரசாயன பொருட்கள் ஏதேனும் பயன்படுத்துகின்றனரா? முறையாக உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வைத்துள்ளனரா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கேக் தயாரிக்கப்படும் பேக்கிரி கடைகளின் தூய்மை தரம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
Next Story
