அழுகும் நிலையில் பயிர்கள் - நிவாரணம் கோரிய விவசாயிகள் | Agriculture | Farmers

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சேகல், மடப்புரம், செம்பியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. வடிகால் வசதி முறையாக செய்யப்படாததால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com