சென்னையில் வரும் 17ம் தேதி அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா
சென்னையில் வரும் 17ம் தேதி அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா
சென்னையில், ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வரும் 17ம் தேதி, அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில், அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O என்ற மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.ஜவஹர்லால் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
Next Story
