

அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி-பி என்ற ஏவுகணை, ஒடிசா கடல்பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்த அக்னி பி என்ற புதிய ரக ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்
உருவாக்கியுள்ளது.
ஒடிசாவை ஒட்டியுள்ள சிறிய தீவான, டாக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து திங்கள் காலை 10.55க்கு ஏவப்பட்ட அக்னி பி ஏவுகணை, திட்டமிட்டபடி, மிகச் சரியான பாதையில் துல்லியமாக பயணித்ததாக டி.ஆர்.டி.ஓ கூறியுள்ளது.
BREATH.. அக்னி பி ஏவுகணை, டி.ஆர்.டி.ஓ, ஒடிசா கடற்பகுதி, டாக்டர் அப்துல் கலாம் தீவு
1,000 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்ட அக்னி பி ஏவுகணை, இதர அக்னி ஏவுகணைகளை விட எடை மற்றும் நீளம் குறைவானது.
அக்னி 3 ஏவுகணையை விட அக்னி பி 50 சதவீதம் எடை குறைவானது ஆகும்.
புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்த அக்னி பி ஏவுகணை, கேனிஸ்டர் பெட்டகத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று, ஏவ முடியும்.
எவ்வகையான நிலப்பரப்பில் இருந்தும் ஏவ முடியும் என்பதால், இந்திய ராணுவத்தின் செயல் திறனை இது வெகுவாக அதிகரிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
ஜூன் 24 மற்றும் 25ஆம் தேதிகளில், ஒடிசாவின் சன்டிப்பூர் கடல் பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பினாகா ராக்கெட்டை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.