காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கச்சிபெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜும் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுமத்ரா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி விடுதியில் சுமத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டவுடன் சுமத்ராவின் காதலன் யுவராஜ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்