10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்ததும் கிளாஸுக்கு பெயிண்ட் அடித்த மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

x

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்டி கொடுத்த மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்வு முடிந்தவுடன் பள்ளி பொருட்களை சேதப்படுத்தும் மாணவர்களுக்கு மத்தியில் முன்மாதிரியாக செயல்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 52 மாணவர்கள் பெற்றோர் உதவியுடன் 15 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்