சென்னைக்கு அடுத்து இதான்.. வேர்ல்டு கிளாஸாக மாறிய ஏர்போர்ட்

x

தமிழர்களின் கலைநயத்துடன் தூத்துக்குடியில் புதிய விமான நிலையம்

தூத்துக்குடி விமான நிலைய புதிய பயணிகள் முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலையமானது 17,000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கப்பட்டு, சென்னைக்கு அடுத்தபடியாக மிக நீமளமான ஓடுதளத்தை கொண்டது என்ற பெருமையை பெற்றுள்ளது. தரைத்தளம் முதல் தளம் என இரண்டு தளங்களிலும் சேர்த்து விமானத்தில் ஏற ஐந்து வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கிறது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களில் பயணிகள் ஏறவும் இறங்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.ஒரே நேரத்தில் 1800 பயணிகளை கையாளும் வகையிலும், 18 கவுண்டர்களும் உள்ளன. மின் நுகர்வை குறைக்கும் வகையில் எல்.இ.டி விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. களரி, சிலம்பம், கரகாட்டம், வீரபாண்டி கட்ட பொம்மன், பாரதியார் உள்ளிட்டவர்களின் ஓவியமும் பண்பாட்டு அடையாளமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுதேசி கப்பலை அடையாளப்படுத்த தனிச்சிலையும், முத்து நகரத்தை அடையாளப்படுத்த தலக்கு சிப்பிக்குள் முத்து இருப்பது போன்ற சிலையும் தமிழர் பெருமை கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்