"நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம்" - டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

நீதிபதிகள் பதவிகளுக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம்" - டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
Published on
தமிழகத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் பணியாற்றும் 500க்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளையும் தொடரும் இந்த போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com