நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டி கொலை.
நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on
தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். வழக்கறிஞரான இவருக்கும், உறவினர் செல்வம் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமாதானம் பேசுவதற்காக செல்வத்தை தனது வீட்டுக்கு வேல்முருகனை அழைத்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், வேல்முருகனை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வம் உள்ளிட்ட 3 நபர்களை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com