ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு
Published on
தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ஆதீன மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் சமயப் பணிகள் தடைபட்டுள்ளதாகவும் உடனடியாக அவற்றை மீட்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், இது குறித்து ஆய்வு செய்ய செப்டம்பர் 5 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறியுள்ளது. இதையடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com