காலில் விழுந்த விளம்பர சுவர்...வலியால் அலறி துடித்த மாணவி..பறிபோன 2 கால்கள்.. படுக்கையில் மாணவி

x

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ஒப்பந்த பணிக்காக வைக்கப்பட்ட விளம்பர சுவர் சாய்ந்ததில் 2 கால்களும் முறிந்து 10ம் வகுப்பு மாணவி படுத்த படுக்கையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தினக்கூலி பெற்றோரின் மகள் ரூபிகா அரசுப் பள்ளியில் ரூபிகா 10ம் வகுப்பு படித்து வருகிறார்... அக்கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகளின் திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்கப்படாத நிலையில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ரூபிகா மீது சுவர் இடிந்து விழுந்தது. வலியால் மாணவி அலறித் துடிக்க, அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரூபிகாவின் கால் எலும்பு முறிந்துள்ளதாகத் தெரிவித்த மருத்துவர்கள் பிளேட் வைத்து அனுப்பியுள்ளனர். ஓடியாடி விளையாடிக் கொண்டு துருதுருவென சுற்றித் திரிந்த தங்கள் மகள் வீட்டில் கால்கள் உடைந்து படுத்த படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து பெற்றோர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அரசு பணிக்காக வைக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்த நிலையில், அதிகாரிகளோ, ஒப்பந்ததாரரோ இதுவரை விசாரிக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்தனர். தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து நிவாரணம் அளிக்க அவர்கள் ஆட்சியருக்கும், அரசுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்