Namakkal ADMK | நில மோசடி வழக்கில் அதிமுக புள்ளி கைது - வழக்கின் பின்னணி என்ன?
ADMK | நில மோசடி வழக்கில் அதிமுக புள்ளி கைது - வழக்கின் பின்னணி என்ன?
நில மோசடி வழக்கு - ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் கைது
நில மோசடி வழக்கில் ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாதத் தவணையில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்படி விசாரணை மேற்கொண்ட போலீசார், ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடி வருகின்றனர்.
Next Story
