அதிமுக Ex.ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 3 பேர் சரண்...

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மணலியை சேர்ந்த ஹரி, காசிமேடு மோகன், திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் ஆகியோர், ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் சரண‌டைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com