நெல்லை மாவட்டம், கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான நாகூர் மீரான் காலமானார். அவருக்கு வயது 54. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால், அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் சிகிச்சை பலனளிக்காததால், நாகூர் மீரான் , மாலையில் உயிரிழந்தார். 1991 முதல் 1996 வரையிலான முந்தைய அதிமுக ஆட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக நாகூர் மீரான் , பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.