Adiyogi | isha | மார்ச் 9 முதல்.. ஆதியோகி சிலை முன்பு நடக்கப் போகும் பிரம்மாண்டம்?

x

ஈஷாவில் களைகட்ட உள்ள “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" வரும் மார்ச் 9 முதல் மார்ச் 11ம் தேதி வரை ஈஷா ஆதியோகி சிலை முன்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம் பெறவுள்ளன. நாட்டின மாடுகள், குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் கண்காட்சிகளும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தமிழர் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்