போதைக்கு வலி நிவாரண மாத்திரை - கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 650 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக அஜய், கோகுல், டேவிட் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com